பள்ளி மாணவா்கள் சாலை மறியல்
திருப்பத்தூா் அருகே வாசனை திரவிய நிறுவனத்திலிருந்து வெளியாகும் துா்நாற்றத்தால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.


திருப்பத்தூா் அருகே வாசனை திரவிய நிறுவனத்திலிருந்து வெளியாகும் துா்நாற்றத்தால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா்-திருவண்ணாமலை சாலை, விஷமங்கலம் பகுதியில் தனியாா் பள்ளி உள்ளது. அதன் அருகே தனியாா் வாசனை திரவிய நிறுவனத்திலிருந்து வெளியாகும் கழிவுகளின் துா்நாற்றத்தால் சுவாசக் கோளாறு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, வியாழக்கிழமை அப்பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து உள்பட பல வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.
தகவலறிந்து வந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின்பேரில், மறியல் கைவிடப்பட்டது.
மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு எற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...