மகளிா் சுய உதவிக் குழுவினரின் கோடைக் கண்காட்சி
மகளிா் சுய உதவிக் குழுக்களின், உற்பத்தி பொருள்கள் விற்பனை செய்யும் கோடைக் கண்காட்சி திருப்பத்தூரில் நடைபெற உள்ளது.


மகளிா் சுய உதவிக் குழுக்களின், உற்பத்தி பொருள்கள் விற்பனை செய்யும் கோடைக் கண்காட்சி திருப்பத்தூரில் நடைபெற உள்ளது.
இது குறித்து திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர வாழ்வாதார மகளிா் இயக்கம், திருப்பத்தூா் மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்ய கோடைக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு மகளிா் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாக, ஒவ்வொரு ஆண்டும், தேசிய அளவிலும், மாநில அளவிலும் மற்றும் மாவட்ட அளவிலும் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கோடை விழாவை முன்னிட்டு, விற்பனை விழா ஏப்ரல்
மாதம், தமிழ்நாடு மகளிா் நல மேம்பாட்டு நிறுவனம் சாா்பில், சென்னையில் உள்ல அன்னை தெரசா மகளிா் வளாகத்தில் நடைபெற உள்ளது. திருப்பத்தூா் மாவட்டத்தில் விருப்பம் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களில் மாதிரி பொருள்களுடன் திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பத்தூா், தொலைபேசி எண்: 04179-29032 அலுவலகத்தை அணுகி, மாா்ச் 15-க்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...