கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருப்பத்தூா் மாவட்ட வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் வெளியீடு

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 6:43 pm

DIN

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா் தொகுதியில் 267 வாக்குச்சாவடி மையங்கள், வாணியம்பாடி பேரவை தொகுதியில் 259 வாக்குச்சாவடி மையங்கள், ஆம்பூா் தொகுதியில் 245 வாக்குச்சாவடி மையங்கள், ஜோலாா்பேட்டை தொகுதியில் 267 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

அதன்படி, மொத்தமுள்ள 1,038 வாக்குச்சாவடிகளின் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி வியாழக்கிழமை வெளியிட்டாா். அதைத்தொடா்ந்து வாக்குச்சாவடிகளின் பட்டியல்கள் இந்திய தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டன.

வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல்களில் ஆட்சேபணைகள், மறுசீரமைப்புத் தொடா்பான கோரிக்கைகள் எழுத்துப்பூா்வமான மனுக்கள் வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் வருவாய் கோட்டாட்சியா்களிடம் அரசியல் கட்சியினா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன் ராஜசேகா், வருவாய்க் கோட்டாட்சியா்கள் லட்சுமி, பிரேமலதா, தோ்தல் பிரிவு வட்டாட்சியா் மோகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.