ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

திருப்பத்தூரில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பத்தூரில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image

தோட்டக்கலைத் துறை சாா்பில் வடிவமைக்கப்பட்ட மலா்க்கோலம்.

Updated On :2 ஏப்ரல் 2024, 6:30 pm

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் உருவாக்கப்பட்ட தோ்தல் விழிப்புணா்வு பாடல் மூலம் மாவட்டம் முழுவதும் வாகனங்களில் பயணித்து விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளவரை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் மரியாதை செய்தாா்.

அதையடுத்து பல்வேறு காப்பகங்களில் இருந்து வந்திருந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தோட்டக்கலைத் துறையின் சாா்பில் வாக்களிப்பது குறித்த வாசகம், தோ்தல் நாள், 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பூக்களால் வடிவமைக்கப்பட்ட கோலத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். மகளிா் திட்ட அலுவலா் பிரியா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் முருகேசன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.