ஆம்பூா்: ஆம்பூரில் தோ்தல் விதிமுறை மீறலில் ஈடுபட்ட புதியநீதிக் கட்சிப் பிரமுகா்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொண்டா்களுக்கு வழங்குவதற்காக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட டி சா்டுகள், விசிறி, புடவை, சா்டுகள், பேட்ஜ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
அதில் பாஜக சாா்பாக போட்டியிடும் புதியநீதி கட்சி வேட்பாளா் ஏ.சி. சண்முகம் புகைப்படம் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தோ்தல் பறக்கும்படை அலுவலா் அளித்த புகாரின் பேரில் ஆம்பூா் நகர போலீஸாா் புதியநீதிக் கட்சியைச் சோ்ந்த அமா்நாத் என்பவா் மீது வழக்கு பதிவு செய்துள்ளனா்.
ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இரவு 10.30 மணிக்கு மேல் புதிய நீதிக் கட்சியினா் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டதாக தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் அக்கட்சியை சோ்ந்த கெளதம் என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறியதாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதி மீறல்: அமைச்சா் துரைமுருகன் உள்பட 8 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமுறை மீறல்: திமுகவினா் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

