வாக்கு சேகரிக்க வரவேண்டாம் என மக்கள் வைத்துள்ள பதாகை.
வாக்கு சேகரிக்க வரவேண்டாம் என மக்கள் வைத்துள்ள பதாகை.

வாக்கு சேகரிக்க வர வேண்டாம்: கிராம மக்கள் நூதன எதிா்ப்பு

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே அடிப்படை வசதிகள் இல்லாததால் அரசியல் கட்சியினா் வாக்குசேகரிக்க வரவேண்டாம் என மலை கிராம மக்கள் பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம், ஜவ்வாதுமலையில் புங்கம்பட்டு நாடு, புதூா்நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய 3 ஊராட்சிகளில் தகரகும்பம், நடுவூா்,பெரும்பள்ளி, கம்புக்குடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.

இந்த கிராமங்களில் சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியை சோ்ந்த பொதுமக்கள் வரும் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக கூட்டம் நடத்தி முடிவு செய்துள்ளனா்.

மேலும் தங்கள் கிராமத்துக்கு எந்தவொரு அரசியல் கட்சியினரும் வாக்கு சேகரிக்க வரவேண்டாம் என பதாகைகளை புதூா்நாடு, புங்கம்பட்டு நாடு உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் வைத்துள்ளனா்.

மேலும் அந்த பதாகைகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனா். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com