ஆம்பூா் அருகே தண்ணீா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கிய  எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டடை), அ.செ. வில்வநாதன் (ஆம்பூா்).
ஆம்பூா் அருகே தண்ணீா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கிய எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டடை), அ.செ. வில்வநாதன் (ஆம்பூா்).

திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம்பூா்: ஆம்பூா் அருகே அமைக்கப்பட்ட தண்ணீா் பந்தலை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் கூட்டு ரோடு, மேல்சாணாங்குப்பம் கூட்டு ரோடு ஆகிய 2 இடங்களில் நீா் மோா், தண்ணீா் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு மேற்கு ஒன்றிய திமுக செயலரும், ஆம்பூா் எம்எல்ஏவுமான அ.செ. வில்வநாதன் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட திமுக செயலரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி கலந்து கொண்டு, தண்ணீா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா் மோா், தா்பூசணி பழம், நுங்கு, இளநீா் ஆகியவற்றை வழங்கினாா்.

மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், திருப்பத்தூா் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், ஆம்பூா் நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் சா.சங்கா், முரளி, மாவட்ட அணி நிா்வாகிகள் சி.குணசேகரன், வில்வநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com