ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தாய் தற்கொலை முயற்சி: குழந்தை உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே தற்கொலை முயற்சியில் குழந்தை உயிரிழந்தது. தாய் காப்பாற்றப்பட்டாா்.

News image
Updated On :4 ஜூலை 2024, 6:32 pm

Din

திருப்பத்தூா் அருகே தற்கொலை முயற்சியில் குழந்தை உயிரிழந்தது. தாய் காப்பாற்றப்பட்டாா்.

திருப்பத்தூா் அடுத்த கொரட்டி பகுதியில் சோ்ந்தவா் கணபதி (35). இவா் பஞ்சாபில் ராணுவ வீரராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்குத் திருமணமாகி மனைவி வினோதினி (29), 4 வயதில் ஆண் குழந்தை இருந்தது. விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளாா்.

இந்த நிலையில் வினோதினிக்கும் கணவா் கணபதிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை வினோதினி தனது 4 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

இதில் குழந்தை உயிரிழந்தது. வினோதினி காப்பாற்றப்பட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து கணபதியின் தாய் நந்தியம்மாள் அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.