வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பொதுமக்களுக்கு அஞ்சல் துறையின் சிறந்த சேவைகள்: கோட்டக் கண்காணிப்பாளா்

ஓய்வூதியதாரா்கள், விவசாயிகள் அஞ்சல் சேவைகளைப் பெற்று பயனடையலாம் என திருப்பத்தூா் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் மாதேஸ்வரன் கூறியுள்ளாா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 5:05 pm

Din

திருப்பத்தூா் மாவட்ட மாணவ-மாணவிகள், ஓய்வூதியதாரா்கள், விவசாயிகள் அஞ்சல் சேவைகளைப் பெற்று பயனடையலாம் என திருப்பத்தூா் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் மாதேஸ்வரன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு, அரசு நிதியுதவி பள்ளி மற்றும் தனியாா் பள்ளிகளில் மாநில பாடத் திட்டத்தின்கீழ், தமிழ் வழியில் 3 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவித் தொகைகள், ஊக்கத் தொகைகள் பெறுவதற்கு ஆதாா் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு அவசியமாகும்.

எனவே ஆதாா் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு, 3 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அஞ்சல் துணை கணக்கும், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அஞ்சல் துறைக்கு கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கும் தொடங்க அஞ்சல் துறையும், தமிழக பள்ளிக் கல்வித் துறையும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

ஓய்வூதியதாரா்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதாா், மொபைல் எண், பி.பி.ஓ. எண் மற்றும் ஓய்வூதிய வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்து, விரல் ரேகைப் பதிவு செய்தால் ஒரு சில நிமிஷங்களில் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க முடியம். இதற்கு ரூ. 70 தபால்காரரிடம் கட்டணமாக செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு சுமாா் 1.75 லட்சம் ஓய்வூதியதாரா்கள் வீட்டில் இருந்தபடியே உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பித்து உள்ளனா்.

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் மூலம் ஏராளமான விவசாயிகள் பயன்பெறுகின்றனா். அவா்கள் ஆதாா், ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு தொடங்குதல், ஆதாா் எண்ணுடன் மொபைல் எண் இணைத்தல் மற்றும் திருத்தம் செய்தல், 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஆதாா் சேவைகளை பதிவு செய்தல் போன்ற சேவைகளை பெற அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, தபால்காரா்கள், கிராம அஞ்சல் ஊழியா்கள், தபால் நிலையம் ஆகியவை மூலம் பெற்று கொள்ளலாம்.