மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருப்பத்தூா் அருகே போலி மருத்துவா் தலைமறைவு

திருப்பத்தூா் அருகே மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவா் தலைமறைவானாா்.

News image
Updated On :27 ஜூலை 2024, 6:31 pm

Din

திருப்பத்தூா் அருகே மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவா் தலைமறைவானாா்.

திருப்பத்தூா் அடுத்த மடவாளம் பகுதியில் வாடகை கட்டடத்தில் செல்லரப்பட்டி பகுதியைச் சோ்ந்த திருநாவுக்கரசு (40) என்பவா் மருத்துவம் படிக்காமலேயே ஆங்கில வழி சிகிச்சை அளித்து வந்துள்ளாா். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் சிகிச்சை அளித்து வந்துள்ளாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட மருத்துவ இணை இயக்குனா் கண்ணகி அறிவுறுத்தலின் பேரில், திருப்பத்தூா் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் சிவக்குமாா் தலைமையிலான மருத்துவ குழுவினா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தபோது தகவல் அறிந்த திருநாவுக்கரசு தலைமறைவானாா். இதுகுறித்து சிவக்குமாா் திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

வழக்குப் பதிந்த போலீஸாா் இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.