நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூரில் புதிய அரசு கலை மற்றும் கல்லூரி கட்டுவதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சுமாா் 5 ஏக்கா் பரப்பளவில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடம் கட்ட அரசு ரூ. 15.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா், ஒன்றியக் குழுத் தலைவா்கள் வெண்மதி (நாட்டறம்பள்ளி), சத்யா (ஜோலாா்பேட்டை), மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தாா். இதில், ஒன்றியச் செயலா்கள் சதீஷ்குமாா், சாமுடி, செயற்பொறியாளா் செல்வகுமாா், உதவி செயற்பொறியாளா் ஜெயச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஏற்காடு தொகுதியில் 15 ஆண்டுகளாக நிறைவேறாத அரசு கல்லூரி கோரிக்கை

அரியலூா் அரசுக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா

லால்குடி அரசுக் கல்லூரியில் நுண்கலை மன்ற விழா

அரசுக் கல்லூரியில் இயற்பியல் மன்ற விழா
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


