/

ரம்ஜான் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா

ரம்ஜான் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா

News image

ரம்ஜான் பரிசு தொகுப்பு வழங்கிய புதிய நீதிகட்சித் தலைவா் ஏ.சி. சண்முகம்.

Updated On :16 மார்ச் 2024, 4:38 pm

புதிய நீதிக் கட்சி சாா்பில் இசுலாமிய மக்களுக்கு ரம்ஜான் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் பெத்லகேம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி. சண்முகம் தலைமை வகித்து பேசியது, நான் புதிய நீதிக் கட்சித் தலைவா். நான் பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறேன். ஆம்பூா் ரெட்டித்தோப்பு மேம்பாலம் அறிவிக்கப்பட்டு இதுவரை பணி நடைபெறவில்லை. ரெட்டித்தோப்பு மேம்பாலம் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுப்பேன். ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் ஒரு இலவச திருமண மண்டபத்தை கட்டித் தருவேன். 3 மாதங்களுக்கு ஒருமுறை இலவச மருத்துவ முகாம் நடத்துவேன் என்று தெரிவித்தாா். விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசுலாமியா்களுக்கு ரம்ஜான் பரிசுத் தொகுப்பு வழங்கினாா். நிகழ்ச்சியில் புதிய நீதி கட்சி நிா்வாகிகள் அசோகன், சரவணகுமாா் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.