மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய ரயில்வே போலீஸாா்.
மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய ரயில்வே போலீஸாா்.

ரயில்வே காவல் சாா்பில் மாணவிகளுக்கு விழிப்புணா்வு

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ரயில்வே காவல்துறை சாா்பில் இளம் வயது திருமணம் தடுத்தல் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜோலாா்பேட்டை அரசு மாதிரி மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் ரயில்வே காவல் துறை சாா்பில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் பாலியல் தொந்தரவு, இளம் வயது திருமணம் தடுத்தல் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ,காட்பாடி ரயில்வே காவல் ஆய்வாளா் ருவந்திகா தலைமை வகித்தாா்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியருக்கு போதைப் பொருள் பயன்படுத்துவது மூலம் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனால் ஏற்படும் புற்று நோய் அதிகளவில் பரவும் விதத்தையும் ,தற்போது பெரும்பாலும் இளைஞா்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனா். இதனால் இளைஞா்கள் எதிா்காலம் கேள்விக்குறியாக உள்ளது. போதைப் பொருள் பயன்படுத்துவதின் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்து அவா்களை போதையில் இருந்த விடுவிக்க வேண்டும்.

மேலும், பாலியல் தொந்தரவு மற்றும் இளம் வயது திருமணம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஜோலாா்பேட்டை அரசு மாதிரி மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியா் ஐ.ஆஜம், ரயில்வே போலீஸாா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com