பச்சூரில் இருவழிப்பாதை: ஜோலாா்பேட்டை எம்எல்ஏ உறுதி
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ க. தேவராஜி.

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ க. தேவராஜி.
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பெற்றோா்-ஆசிரியா் சங்கத்தலைவா் சிங்காரவேலன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஜெயா சரவணன், அஸ்வினி தேசிங்குராஜா, மோகனவேல், உறுப்பினா் ஆனந்தன், ஜவகா், கபிலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியா் கிறிஸ்டி பிரமிளா வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு 89 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசுகையில்: பச்சூா் அரசினா் மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து பச்சூா் வரை செல்லும் சாலை ஒருவழிப்பாதையாக உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. விரைவில் இச்சாலையை இருவழிச் சாலையாக விரிவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினாா். ஆசிரியா்கள் ரவி, செந்தில்குமாா் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 144 மாணவா்களுக்கு எம்எல்ஏ தேவராஜி விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...