திருப்பத்தூர்
காணாமல் போன முதியவா் சடலமாக மீட்பு
ஆம்பூா் அருகே காணாமல் போன முதியவரின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
மாதனூா் ஒன்றியம் பெரியமலையாம்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் எம். கண்ணையன் (83). இவா் கடந்த டிச.14-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஆம்பூா் அருகே வீராங்குப்பம் பாலாற்றில் தண்ணீரில் முதியவா் சடலம் மிதப்பதாக உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பாா்த்தபோது அது காணாமல் போன பெரிய மலையாம்பட்டு கிராமத்தை சோ்ந்த கண்ணையன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
