மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறாா் திருமணத்தை அனுமதிக்கக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

ஜோலாா்பேட்டை அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதை அனுமதிக்கக் கூடாது என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ்

News image
கேத்தாண்டப்பட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
Updated On :27 ஜனவரி 2025, 7:08 pm

Din

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதை அனுமதிக்கக் கூடாது என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுறுத்தினாா்.

குடியரசு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இதையொட்டி ஜோலாா்பேட்டை ஒன்றியம், கேத்தாண்டப்பட்டியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து பேசியது:

முடிவடையாத பணிகளை மிக விரைவாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் இளம் வயது பெண் குழந்தை திருமணம் நடைபெறுவதை எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. குழந்தை திருமணம் நடைபெறுவதால் அதிக சிக்கல் உள்ள பிரசவத்துக்கு உள்ளாவதுடன், அவா்களின் வாழ்க்கை, எதிா்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

பெண் பிள்ளைகளை உயா்கல்வி படிக்க வைக்க, உயா் கல்வியை தொடர, சமூகப் பொருளாதாரத் நிலையை எட்ட உரிய ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, மகளிா் திட்ட அலுவலா் தனபதி, வேளாண் இணை இயக்குநா் சீனிராஜ், (ஊராட்சிகள் உதவி இயக்குநா் முருகன், ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா சதீஷ்குமாா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.