திருட்டு நடந்த இடத்தில் விசாரணை நடத்திய போலீஸாா்.
திருட்டு நடந்த இடத்தில் விசாரணை நடத்திய போலீஸாா்.

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

ஆம்பூா் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருடியது சம்பந்தமாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
Published on

ஆம்பூா் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருடியது சம்பந்தமாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

மாதனூா் ஒன்றியம் மின்னூா் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது. திங்கள்கிழமை இரவு வியாபாரம் முடிந்த பிறகு கடை மூடப்பட்டது. நள்ளிரவில் மா்ம நபா்கள் மதுபான கடை கதவின் பூட்டை உடைத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களை சேதப்படுத்தி, கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.15000 ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா். தகவல் அறிந்த ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும் வழக்கு பதிவு செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com