கடத்துவதற்காக பதுக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி. ~பறிமுதல் செய்யப்பட்ட காா்.
கடத்துவதற்காக பதுக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி. ~பறிமுதல் செய்யப்பட்ட காா்.

பதுக்கப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி, காா் பறிமுதல்

Published on

வாணியம்பாடி அருகே கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி, காா் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூா் எஸ்.பி. சியாமளா தேவி உத்தரவின் பேரில் வாணியம்பாடி குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு துறை உதவி காவல் ஆய்வாளா் அன்சாரி தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியான மாதகடப்பா மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அப்பகுதியில் உள்ள கோயில் பின்புறம் வெளிமாநில பதிவு எண் கொண்ட காா் ஒன்று தனியாக நின்றிருப்பதை அறிந்து சந்தேகத்தின் பேரில் சென்று சோதனை செய்த போது காரில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. மேலும், ரேஷன் அரிசியை கடத்தி செல்வதற்காக மூட்டைகள் ஆங்காங்கே வைத்திருப்பது தெரியவந்து கண்டறியப்பட்டது.

பிறகு அங்கிருந்து ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக காா் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்த முயன்ாக ராஜலிங்கம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com