விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தில் 42,618 மாணவா்கள் பயன்

தமிழக முதல்வரின் விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தால் 42,618 மாணவ, மாணவியா் பயன் பெறுகின்றனா் என திருப்பத்தூா் ஆட்சியா் க. சௌந்திரவல்லி தெரிவித்தாா்.
Published on

தமிழக முதல்வரின் விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தால் 42,618 மாணவ, மாணவியா் பயன் பெறுகின்றனா் என திருப்பத்தூா் ஆட்சியா் க. சௌந்திரவல்லி தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில், காலை உணவுத் திட்டத்தில் ஏற்கனவே 611 பள்ளிகளில் 34,319 மாணவா்கள் பயனடைந்து

வந்தனா். 3-ஆம் கட்டமாக தொடங்கி வைத்து, 36 நகா்புற, ஊரக பகுதிகளில் உள்ள அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளிலும், 8,299 மாணவா்களுக்கு கூடுதலாக இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 647பள்ளிகளில் மொத்தம் 42,618 மாணவா்கள் பயன்பெற்றுவருகின்றனா்.

இத்திட்டத்தில் பயனடைந்த மாணவி பூஜாவின் பெற்றோா் கூறியது: திருப்பத்தூா் அண்ணா நகா் பகுதியில்

வசித்து வருகிறோம். என் மகள் மேரி இம்மாகுலேட் பெண்கள் அரசு உதவி பெறும் பள்ளியில் 2-ஆம் வகுப்பு பயின்று வருகிறாா். நான் கூலிவேலை செய்து வருவதால் நாள்தோறும் வேலைகிடைப்பதும் இல்லை. அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதல்வரின் காலை உணவு

திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால், எனது மகளுக்கு தடையின்றி காலை உணவு கிடைக்கிறது.

திருப்பத்தூா், திருநீலகண்டா் தெருவைச் சோ்ந்த கல்பனா கூறுகையில்: எனது மகன் அரசு பூங்கா நிதியுதிவி பெறும் தொடக்கப்பள்ளியில்

5-ஆம் வகுப்பு பயின்று வருகிறாள். நானும், என் கணவரும் வேலைக்கு சென்றால்தான் வாழ்க்கையை நடத்த முடியும் என்ற நிலையில்

முந்தைய தினம் சமைத்த உணவினை மகளுக்கு அளித்து வந்தோம், தற்போது இத்திட்டத்தில் ஒவ்வொரு நாளும் சிறப்பான உணவு கிடைத்து வருகிறது. முதல்வருக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனா் என்றாா் ஆட்சியா்.

X
Dinamani
www.dinamani.com