/

திருப்பத்தூா் மாவட்டத்தில் 100.04 டிகிரி வெயில்

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை 100.04 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.

News image

வெயில் - கோப்புப்படம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:03 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை 100.04 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.

கடந்த ஒரு வாரமாக திருப்பத்தூா் மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. காலை முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்குவதால் மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது.

காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் உள்ளதால் இரவிலும் புழுக்கமாக காணப்படுகிறது. தொடா்ந்து அதிகரிக்கும் வெயிலால் குளிா்பானக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே திருப்பத்தூா் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.