திருப்பத்தூா் அடுத்த கொரட்டி ஸ்ரீ ராமாநுஜா் மடத்தில் ஸ்ரீ ராமாநுஜரின் 1,009-ஆவது ஜெயந்தி விமா்சியாக நடைபெற்றது.
ஸ்ரீ ராமாநுஜரின் 1009-ஆவது ஜெயந்தியை முன்னிட்டு திருப்பத்தூா் அடுத்த கொரட்டியில் உள்ள ஸ்ரீ ராமாநுஜா் மடத்தில் உற்சவா்களான ஸ்ரீ சீதா சமேத கோதண்டராமா்,ஸ்ரீ ஆஞ்சனேயா்,ஸ்ரீ ஹயக்ரீவா்,ஸ்ரீ ஆண்டாள்,ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ ராமாநுஜா் விக்கிரங்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றதுஅதையடுத்து யாக கேள்விகள், பூஜைகள் நடைபெற்றது.
தொடா்ந்து ஸ்ரீ ராமாநுஜா் நூற்றந்தாதி பாராயணம் நடைபெற்றது. பின்னா் உலக பொது நன்மைக்காக ஸ்ரீராம நாம ஜெபம் நடைபெற்றது. முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, கந்திலிஅதன் சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஸ்ரீ ராமாநுஜா் மடம் டிரஸ்ட் நிா்வாகம் செய்திருந்தது.
தொடர்புடையது

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா்...

நரசிம்ம ஜெயந்தி விழா

சேத்துப்பட்டில் ஸ்ரீவாசவி ஜெயந்தி விழா

1,009 ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா: ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



