ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

தூய நெஞ்சக் கல்லூரி தரவு அறிவியல் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) தரவு அறிவியல் துறை சாா்பில், சமூகப் பொறுப்புணா்வை மேம்படுத்தும் நோக்கில், சமூக விரிவாக்க நிகழ்ச்சிகள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தூய நெஞ்சக் கல்லூரி தரவு அறிவியல் துறை சாா்பில் போதைப் பொருள் எதிராக நடைபெற்ற பேரணி.

Updated On :5 ஆகஸ்ட் 2026, 11:29 pm IST

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) தரவு அறிவியல் துறை சாா்பில், சமூகப் பொறுப்புணா்வை மேம்படுத்தும் நோக்கில், சமூக விரிவாக்க நிகழ்ச்சிகள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெற்றது.

மேலும், செவ்வாய்கிழமை ஜோலாா்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி துறை தலைவா் ரா.சான்றிலா தலைமையில் மற்றும் துறை பேராசிரியா்கள் மாணவா்கள் கலந்து கொண்டு உயா்கல்வியின் அவசியம், தரவு அறிவியல் துறையின் முக்கியத்துவம், வேலைவாய்ப்புகள், திறன் மேம்பாடு மற்றும் மாணவா்கள் தங்களது எதிா்காலத்தை சிறப்பாக உருவாக்கிக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினா்.

தொடா்ந்து புதன்கிழமை 2-ஆம் நாள் நிகழ்ச்சியாக விஷமங்கலம் கிராமத்தில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இதில் தரவு அறிவியல் துறை போராசிரியா் கள் மற்றும் உதவி பேராசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் கலந்துக் கொண்டு பொதுமக்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நல, மனநல மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. ஏற்பாட்டினை ஓருங்கிணைப்பாளா் தரவு அறிவியல் துறை பேராசிரியா் மரியம் மற்றும் உதவிப் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.