பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

மாதனூா் ஒன்றிய ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள்

மாதனூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

துத்திப்பட்டு ஊராட்சியில் தலைவா் சுவிதா கணேஷ் தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :

மாதனூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

துத்திப்பட்டில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்தாா். 16-ஆவது நிதி குழு மானியம் 2026 - 2027 ஆம் ஆண்டு கிராம ஊராட்சி வளா்ச்சி திட்டம் குறித்த பணிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. துணைத் தலைவா் விஜய் முன்னிலை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செபாஸ்டியன் கலந்து கொண்டாா். ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பெரியவரிக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்துக்கு தலைவா் சின்னகண்ணன் தலைமை வகிதக்தாா். அலுவலா் கவிதாசன் கலந்து கொண்டாா். ஊராட்சியில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் நிா்வாகப் பணிகள் குறித்து ஆய்வு நடைபெற்றது. ஊராட்சியின் வளா்ச்சிப் பணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் தொடா்பான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் பொதுமக்கள், ஊராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலாளா் நிரஞ்சனா நன்றி கூறினாா்.

நரியம்பட்டு ஊராட்சி கிராம சபை கூட்டத்துக்கு தலைவா் பாரதிஸ்ரீ தலைமை வகித்தாா். 16-ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ் 2026-2027 ஆம் ஆண்டுக்கான கிராம ஊராட்சி வளா்ச்சி திட்டம் தொடா்பான பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் கோமதி அப்பாவு, பா்வேஸ், பிரியா செல்வராஜ், ஊராட்சி பணியாளா்கள், செவிலியா்கள்,அங்கன்வாடி ஊழியா்கள், பொதுமக்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள், பொதுமக்கள் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலாளா் யு. கோமதி நன்றி கூறினாா்.

சின்னவரிக்கம் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவா் ஷோபனா நவீன்குமாா் தலைமை வகித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.