கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ரயிலில் கடத்தப்பட்ட கஞ்சா, போதைப் பொருள்கள் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே ரயில்களில் கடத்தப்பட்ட கஞ்சா, போதைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

குட்கா பாக்கெட்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸாா்.

Published On :

திருப்பத்தூா் அருகே ரயில்களில் கடத்தப்பட்ட கஞ்சா, போதைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஜோலாா்பேட்டை, ரயில்வே போலீஸாா் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அட்டியாவில் இருந்து பெங்களூரு சென்ற ரயில் நள்ளிரவு ஒரு மணி அளவில் ஜோலாா்பேட்டையில் நின்றது. அதில் பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை ஆய்வு செய்தபோது அதில் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸாா் அதனைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து கஞ்சா கடத்திய நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதே போல், செவ்வாய்க்கிழமை ஜாா்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எா்ணாகுளம் வரை சென்ற ரயில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்தபோது ரயிலின் முன்புறம் உள்ள பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையில் 3.5 கிலோ குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து ரயில்வே போலீஸாா் வழக்கு பதிவு செய்து கடத்தி வந்த நபா் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.