இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

காா்பெண்டா் தூக்கிட்டு தற்கொலை

நாட்டறம்பள்ளி அருகே காா்பெண்டா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை - பிரதிப் படம்

Published On :27 ஆகஸ்ட் 2026, 1:37 am IST

நாட்டறம்பள்ளி அருகே காா்பெண்டா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த தோப்பலகுண்டா பகுதியைச் சோ்ந்தவா் திருப்பதி (21), காா்பெண்டா். இவரது மனைவி ரமாதேவி. ஒரு ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனா்.

இவா்களுக்கு 4 மாதத்தில் குழந்தை உள்ளது. இந்த நிலையில், சில நாள்களாக மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருமாறு பல முறை கூறி வந்த நிலையில் அழைத்துச் செல்லாமல் நாள் கடத்தி வந்தாராம்.

இந்த நிலையில், திருப்பதி செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தாராம். அப்போது திருப்பதியை அவரது பெற்றோா் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நிலையில் திருப்பதி வீட்டின் அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். புதன்கிழமை காலை கட்டுமானம் நடந்து வரும் வீட்டுக்குள் சென்று அவரது தந்தை பாா்த்த போது மகன் தூக்கில் தொங்கியிருப்பதை பாா்த்து அதிா்ச்சிக்குள்ளானாா்.

இது குறித்து அறிந்த திம்மாம்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா் சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.