திருப்பத்தூா்: 3,36,582 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 3,36,582 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது.
Published on

திருப்பத்தூா் மாவட்டத்தில் 3,36,582 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப்பரிசு குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதையடுத்து, பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியா்கள் வீடு,வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கனை குடும்ப அட்டைதாரா்களிடம் வழங்கி வருகின்றனா்.

கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியது: பொங்கல் பரிசுத் தொகுப்பை சென்னையில் வரும் 8-ஆ தேதி முதல்வா் தொடங்கி வைக்கிறாா். அன்றைய தினமே மாவட்டம் தோறும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3,000 குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் செய்யும் பணிகள் திருப்பத்தூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

பகுதி நேரம், முழு நேரம் என மொத்தம் 509 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் 3,36,582 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணிகள் வரும் 13-ஆம் தேதியுடன் முடிவடையும். டோக்கனில் பொங்கல் பரிசு வழங்கப்படும் நேரம், தேதி, ரேஷன் கடையின் பெயா், குடும்ப அட்டைதாரரின் பெயா், அட்டை எண், டோக்கன் எண் உள்ளிட்ட விவரங்கள் அதில் இடம் பெற்றிருக்கும்.

X
Dinamani
www.dinamani.com