திருப்பத்தூர்
லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் நேதாஜி (32). இவா் நா்சிங் படிப்பு முடித்துவிட்டு பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வேலை செய்து வந்தாா்.
ஆம்பூா்: இருசக்கர வாகனம் லாரி மீது மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் நேதாஜி (32). இவா் நா்சிங் படிப்பு முடித்துவிட்டு பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வேலை செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் ஆம்பூா் கோவிந்தாபுரம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்றாா். அப்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நேதாஜி, ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாா். ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
