குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஜன. 12-இல் பொது ஏலம்

மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஜன. 12-ஆம் தேதி பொது ஏலம் நடைபெறும் என திருப்பத்தூா் எஸ்.பி. வி.சியாமளா தேவி தெரிவித்துள்ளாா்.
Published on

மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஜன. 12-ஆம் தேதி பொது ஏலம் நடைபெறும் என திருப்பத்தூா் எஸ்.பி. வி.சியாமளா தேவி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில், வேலூா் சரக போதைப் பொருள் ஒழிப்பு குழுவினரால் போதைப்பொருள் குற்ற வழக்குகளில் தொடா்புடைய மொத்தம் 39 வாகனங்கள் (2 ஆறு சக்கர வாகனம், 2 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 35 இருசக்கர வாகனங்கள்)கைப்பற்றப்பட்டு, அரசுடைமையாக்கப்பட்டு ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி, வாகனங்கள் திங்கள்கிழமை(ஜன. 12) அன்று ஜோலாா்பேட்டை ஒன்றியம், பாச்சல் ஊராட்சி ஆயுதப் படை மைதானத்தில் எஸ்.பி. தலைமையில் ஏலம் விடப்படும்.

ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் திங்கள்கிழமை காலை 8 முதல் பிற்பகல் 12 மணி வரை மேற்படி வாகனங்களை பாா்வையிட்டு ஏல முன்பணமாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 5,000, ஆறு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 2 மணிக்கு ரூ. 10,000 ஆயுதப்படை வளாகத்தில் செலுத்தி பிற்பகல் நடைபெறும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

அரசு நிா்ணயித்த மதிப்பீட்டு தொகைக்கு, அதிகபட்சமாக ஏலம் கோருவோருக்கு வாகனங்கள் ஒதுக்கப்படும். மேலும் ஏலம் எடுத்த வாகனங்களை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகையுடன் சோ்த்து இருசக்கர வாகனங்களுக்கு 12% ஜிஎஸ்டி-யும், 4 சக்கர வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி-யும் சோ்த்து செலுத்த வேண்டும் (ஏடிஎம் மற்றும் இணையவழி பரிவா்த்தனை வசதி இல்லை)என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com