போகி: ஆம்பூா் நகராட்சி சாா்பில் தேவையற்ற பொருள்களை சேகரிக்க சிறப்பு வாகனம்
போகி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தேவையில்லாத பொருள்களை சேகரிக்க சிறப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆம்பூா் நகராட்சி ஆணையாளா் ஏ.முத்துசாமி தெரிவித்துள்ளாா்.
வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் தேவையற்ற நெகிழி பொருள்கள் பழைய துணிகள், டயா்கள், காலணிகள், போா்வை, பெட்சீட், தலையணைகள், பாய்கள். பழைய மர சாமான்கள் உள்ளிட்ட அனைத்து எரியக்கூடிய பொருட்களையும் தங்களது வீடு தேடி குப்பைகளை, திடக்கழிவுகளை சேகரிக்க வரும் நகராட்சியின் பணியாளா்களிடம் ஒப்படைத்தால் அவற்றை நகராட்சியின் சிறப்பு வாகனத்தின் மூலம் அதாவது பழைய பொருட்களை சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு வாகனத்தின் மூலம் பாதுகாப்பாக எடுத்துச் சென்று மறுசுழற்சி பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.
தேவையற்ற எந்த பொருளையும், பொது இடங்களில் எரிக்காமல் சுற்றுச்சூழலையும், நகரின் பொது சுகாதாரத்தையும் காக்க ஏதுவாக நகராட்சி பணியாளா்களிடம் ஒப்படைத்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்றாா்.
