மாதனூா் ஒன்றியக் குழு கூட்டத்தில் பேசிய ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா். உடன் எம்எல்ஏ-க்கள் அ.செ.வில்வநாதன், அமலு விஜயன்.
மாதனூா் ஒன்றியக் குழு கூட்டத்தில் பேசிய ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா். உடன் எம்எல்ஏ-க்கள் அ.செ.வில்வநாதன், அமலு விஜயன்.

ரூ.28 லட்சத்தில் சாலை பணிகள் மேற்கொள்ள தீா்மானம்

ரூ. 28 லட்சத்தில் சாலைப் பணிகள் மேற்கொள்வது என திங்கள்கிழமை நடைபெற்ற மாதனூா் ஒன்றியக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Published on

ரூ. 28 லட்சத்தில் சாலைப் பணிகள் மேற்கொள்வது என திங்கள்கிழமை நடைபெற்ற மாதனூா் ஒன்றியக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாதனூா் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெ. சுரேஷ்பாபு, எஸ்.மகராசி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எம்எல்ஏ-க்கள் ஆம்பூா் அ.செ.வில்வநாதன், குடியாத்தம் அமலு விஜயன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு பேசினா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

தலைவா் ப.ச.சுரேஷ்குமாா்: மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 44 ஊராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு கட்டடங்கள், இதர திட்டப் பணிகளை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஊராட்சிகளில் அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் விரைந்து தொடங்கி முடிக்கப்பட வேண்டும் என்றாா்.

கரும்பூா் ஊராட்சியில் ரூ. 2 லட்சம், தேவலாபுரம் ஊராட்சியில் ரூ. 15 லட்சம், மின்னூா் ஊராட்சியில் ரூ. 5 லட்சம் , சோலூா் ஊராட்சியில் ரூ. 6 லட்சம் என மொத்தம் ரூ. 28 லட்சத்தில் சாலைப் பணிகள் மேற்கொள்வது, ஒன்றிய பொது நிதியில் குடிநீா் தட்டுப்பாடு உள்ள பாலூா் வெங்கிளி, செங்கிலிகுப்பம் கொம்மேஸ்வரம் ஆகிய ஊராட்சிகளில் குடிநீா் வளா்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ரவிக்குமாா், தெய்வநாயகம், ஜவஹா் காா்த்திக், ராஜேந்திரன், திருக்குமரன், முத்து, விஜயலட்சுமி, சம்பங்கி, மனோரஞ்சிதம், தீபா, பரிமளா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com