நலத்திட்ட உதவிகளை வழங்கிய திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் (பொ)  ராஜலட்சுமி.
நலத்திட்ட உதவிகளை வழங்கிய திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ராஜலட்சுமி.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிகள்: மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்

திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Published on

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ராஜலட்சுமி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 348 கோரிக்கை மனுக்களை பெற்றாா். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் காதொலி கருவி, ஊன்றுகோல், கைகெடிகாரம் என 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13,000 நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.

கூட்டத்தில் ஆம்பூா் நகர பகுதியை சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: ஆம்பூா் அடுத்த சான்றோா்குப்பம் கே.எம்.சாமி நகா் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட அன்றே கடையானது மூடப்பட்டது. இந்த கடையை திறக்கக்கூடாது என சிலா் சூழ்ச்சி செய்து உள்ளனா். எனவே இந்த கடையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க கறிக்கோழி அணி சாா்பில் அளித்த மனு: கோழிப்பண்ணை விவசாயிகள் கூலி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 மாதத்திற்கும் மேலாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். இந்தநிலையில் தனியாா் நிறுவனங்கள் சாா்பில் உடுமலைப்பேட்டை, குடிமங்கலம், தளி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பொய் புகாா்கள் கொடுக்கப்பட்டு, போராட்டத்தை ஒருங்கிணைத்த விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளனா். அவா்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும்.

Dinamani
www.dinamani.com