வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

22 கிலோ குட்கா பொருள்கள் காருடன் பறிமுதல்: வியாபாரி கைது

நாட்டறம்பள்ளி அருகே காரில் ஆந்திரத்திலிருந்து 22 கிலோ குட்கா கடத்திய வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :2 ஜூலை 2026, 12:03 am IST

நாட்டறம்பள்ளி அருகே காரில் ஆந்திரத்திலிருந்து 22 கிலோ குட்கா கடத்திய வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

நாட்டறம்பள்ளி, பச்சூா், டோல்கேட், வெலகல்நத்தம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மூா்த்தி தலைமையில், உதவி காவல் ஆய்வாளா் விஸ்வநாதன் மற்றும் போலீஸாா் வாகன சோதனை மேற்கொண்டனா்.

அப்போது ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் இருந்து பா்கூா் நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனா். காரில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காருடன் 22 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் பகுதியைச் சோ்ந்த மளிகை கடை வியாபாரி வடிவேல் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.