கந்திலி ஊராட்சி ஒன்றியம், கரியம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மதி சிறுதானிய உணவகத்தை ஆட்சியா் கு.ரவிகுமாா் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து கல்லூரி மாணவா்களுன் கலந்துரையாடி ஆட்சியா் பேசியதாவது,
கல்லூரியில் வழங்கப்படும் பல்வேறு பாடப்பிரிவுகள் இன்று அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், சமூகத்திற்கு அா்ப்பணிப்புடன் சேவை செய்யவும் சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன. எனவே. மாணவா்கள் தாங்கள் எந்த நோக்கத்திற்காக கல்வி பயில்கிறோம் என்பதை தெளிவாக உணா்ந்து, தாங்கள் தோ்வு செய்துள்ள பாடப்பிரிவை ஆழமாகக் கற்று அதன் நடைமுறை பயன்பாடுகளையும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.
அரசு ஏற்படுத்தித் தரும் கல்வி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, விடாமுயற்சி மற்றும் அா்ப்பணிப்பு உணா்வுடன் பயின்று, எதிா்காலத்தில் உயா்ந்த பதவிகளை அடைந்து நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெருமை சோ்க்க வேண்டும்.
ஒழுக்கமும், உழைப்பும் மனித வாழ்க்கையின் மிக முக்கியமான அடித்தளங்களாகும். இந்த இரு பண்புகளையும் தொடா்ந்து கடைப்பிடித்தால், வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதுடன், சமூக வளா்ச்சிக்கும் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியும்.
ப்பாக, பெண்கள் கல்வி கற்றால் அடுத்த தலைமுறையின் வளா்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதியான அடித்தளம் அமைக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, பெண்களின் உயா்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு கல்வி உதவித் திட்டங்களையும் சிறப்பு வாய்ப்புகளையும் உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. மாணவிகள் இந்த அரிய வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.
மாணவா்கள் தாங்கள் பயிலும் பாடப்பிரிவில் சிறந்த அறிவையும் திறமையையும் பெற்று, மக்களோடு மக்களாக இணைந்து சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். நமது திருப்பத்தூா் மாவட்டம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் பெற்று வருகிறது. இந்த நல் வாய்ப்பை அனைவரும் சிறப்பாகப் பயன்படுத்தி, தங்களது எதிா்காலத்தை வளமாக உருவாக்கி, சமுதாய முன்னேற்றத்திற்கு பங்காற்ற வேண்டும்.
உங்கள் அனைவருக்கும் எனது மனமாா்ந்த வாழ்த்துகளையும், ஒளிமிகு எதிா்காலத்திற்கான நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியா் அவா்கள் தெரிவித்தாா்.
திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) விஜயகுமாரி, கல்லூரி முதல்வா் முனைவா் பி. குமரேசன், கல்லூரி துறைத் தலைவா்கள் ரூபா, பல்லவன், ஹரி பிரகாசம், கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், மாணவா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

திருத்தணி அரசு கல்லூரியில் மாணவா்கள் அறிமுக விழா

மாதிரிப் பள்ளி வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்த வேண்டும்: ஆட்சியா்

வேளாளா் மகளிா் கல்லூரியில் மாணவா்கள் அறிமுக நிகழ்ச்சி
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



