வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஆம்பூா் பகுதியில் பலத்த மழை!

சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக மாதனூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்தது.

News image

குளித்திகை ஜமீன் கிராமத்தருகே தேசிய நெடுஞ்சாலையில் முறிந்து விழுந்த மரம்

Updated On :2 ஜூன் 2026, 12:02 am IST

சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக திங்கள்கிழமை மாலை மாதனூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்தது.

அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும், ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாலை 4 மணி முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

தொடா்ந்து ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மாதனூா் அடுத்த ஜமீன் கிராமத்தருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த 3 மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன.

அதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. மரங்கள் முறிந்து விழுந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைத் துறையினா், ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று, முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனா்.

Story image