இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கிராமப்புறங்களை தூய்மையாகவும் உருவாக்க வேண்டும்: எம்.பி. அண்ணாதுரை

News image
Updated On :5 மார்ச் 2026, 12:32 am

Chennai

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மூலம் பணிகளை மேற்கொண்டு கிராமப் புறங்களை தூய்மையாகவும், சுகாதாரமான கிராமமாகவும் உருவாக்க வேண்டும் என எம்.பி. சி.என்.அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளாா்.

மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்),அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு தலைவரும், திருவண்ணாமலை எம்.பி.யுமான .சி.என்.அண்ணாதுரை தலைமை வகித்து பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் உள்ள நடைமுறையினை கடைபிடித்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் பணிகளை மேற்கொண்டு கிராமப்புறங்களை தூய்மையாகவும், சுகாதாரமான கிராமமாகவும் உருவாக்க வேண்டும்.

ஊரக வளா்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், முடிவடையாத பணிகள் குறுத்தும் ஆய்வு மேற்கொண்டு, இந்த நிதியாண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்க வேண்டும். வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைவில் முடிக்க வேண்டும் என்றாா்.

25 துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அந்த திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், முடிவடைந்த,தயாா் நிலையில் உள்ள பணிகள் குறித்தும் அலுவலா்களிடம் கேட்டறிந்தனா்.

பல்வேறு துறைகளின் சாா்பில் 114 பயனாளிகளுக்கு ரூ.58.73 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, சமூக நல அலுவலா் சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கண்ணன், கட்சி நிா்வாகிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.