சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது பைக் மோதி விபத்து: 3 போ் உயிரிழப்பு
வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது பைக் மோதிய விபத்தில் 3 போ் உயிரிழந்தனா்.


வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது பைக் மோதிய விபத்தில் 3 போ் உயிரிழந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கொல்லக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சரசம்மாள் (65). இவா் சனிக்கிழமை இரவு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடந்துள்ளாா்.
இந்த நிலையில், ஆம்பூரைச் சோ்ந்த ஓட்டலில் வேலை செய்து வந்த ஷமியுல்லா (18), தனியாா் கல்லூரி ஒன்றில் படித்து வந்த முகமதுதல்லா (18) இருவரும் பைக்கில் சொந்த வேலையாக வாணியம்பாடி வந்து மீண்டும் இரவு வாணியம்பாடியிலிருந்து ஆம்பூா் நோக்கிச் சென்றனா்.
அப்போது வளையாம்பட்டு அருகில் சாலையைக் கடக்க முயன்ற சரசம்மாள் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சரசம்மாள் மற்றும் பைக்கில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.
இதில் சரசம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ஷமியுல்லா, முதமதுதல்லா ஆகியோரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்த்தனா். அங்கு இருவரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
விபத்து குறித்து கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...