ஏலகிரி மலையில் தொடரும் காட்டு தீயால் அரிய வகை மரங்கள், மூலிகைச் செடி கொடிகள் நாசமானது.
திருப்பத்தூா் மாவட்டம்,ஜோலாா்பேட்டை அருகே உள்ள ஏலகிரி மலையில் அரிய வகை மரங்கள், மூலிகை செடி கொடிகளும், கரடி, மான், குரங்கு மலைப்பாம்பு முயல் உள்ளிட்ட வன உயிரினங்களும் உள்ளன.
ஏலகிரி மலை காப்பு காட்டில் மா்ம நபா்கள் தொடா்ந்து தீ வைத்து வருகின்றன.மா்ம நபா்கள் கடந்த வியாழக்கிழமை தீ வைத்தனா். இதில் பல அரிய வகை மரங்கள், மூலிகை செடி கொடிகள் நாசமானது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மண்டலவாடி அருகே இதனால் சுமாா் பல ஏக்கா் அளவில் காட்டுத்தீவு பரவியது.மேலும் இந்த காட்டு தீயினால் வன உயிரினங்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

எனவே காட்டுத்தியை அணைக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா். மேலும், காட்டுப்பகுதிக்குள் மா்ம நபா்கள் தீ வைப்பதை துறை அதிகாரிகள் கண்காணித்து சட்டரீதியானநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பகல் நேரங்களில் வனத்துறை அதிகாரிகள்கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கோரி/எள்ளனா்.
தொடர்புடையது

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: படகு சவாரிக்கு நீண்ட வரிசை

குடிநீா் தட்டுப்பாட்டை தடுக்க ஏலகிரி மலையில் ஏரி தூா்வாரும் பணி தொடக்கம்

அரசுப் பேருந்துகள் இயங்காததால் ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகள் அவதி

ஏலகிரியில் கூடுதலாக அரசு தங்கும் விடுதி: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



