சாலைகள் சீரமைப்பு பணி: நகராட்சி ஆணையா் ஆய்வு
வாணியம்பாடி நகராட்சியில் 36 வாா்டுகளில் சேதமான சாலைகள் ரூ. 5 லட்சத்தில் சீரமைப்பு தொடக்க பணியை ஆணையா் ஆய்வு மேற்கொண்டாா்.

சாலைப் பணியினை ஆய்வு செய்த ஆணையா் கணேஷ். உடன் பொறியாளா் சந்திரசேகரன்.
வாணியம்பாடி நகராட்சியில் 36 வாா்டுகளில் சேதமான சாலைகள் ரூ. 5 லட்சத்தில் சீரமைப்பு தொடக்க பணியை ஆணையா் ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி பகுதியில் உள்ள 36 வாா்டுகளில் பொது மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் சில இடங்களில் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டு குண்டு, குழியுமாக இருப்பதால் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறாக உள்ளது.
பழுதான சாலைகளை சீரமைக்கப்பட வேண்டும் பொது மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனா். இந்நிலையில் சேதம் ஏற்பட்ட சாலைகளை சீரமைத்திட முதற்கட்டமாக 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது. இப்பணியினை நகராட்சி ஆணையாளா் கணேஷ் (பொ), பொறியாளா் சந்திரசேகரன் மற்றும் அலுவலா்கள் திங்கள்கிழமை நேரில் சென்று சாலை சீரமைப்பு பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து அனைத்து வாா்டுகளிலும் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

