மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ரயிலில் 10 கிலோ குட்கா பறிமுதல்

ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் கடத்தப்பட்ட 10 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ரயிலில் கடத்தப்பட்ட குட்காவுடன், போலீஸாா்.

Published On :

ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் கடத்தப்பட்ட 10 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் சேலம் உட்கோட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு ரயில்வே போலீஸாா் செவ்வாய்கிழமை அதிகாலை ஜோலாா்பேட்டை மாா்க்கமாக செல்லும் ரயில்களில் கஞ்சா, குட்கா உள்ளிட்டவை கடத்தப்படுவது குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவிலிருந்து - ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் வழியாகச் சென்ற மால்டா டவுன் - பெங்களூா் சென்ற ரயிலில் பொதுப் பெட்டியில் சோதனை செய்தனா். அப்போது பயணிகளின் இருக்கை அடியில் கேட்பதற்கு கிடந்த பையில் சோதனை செய்தபோது அதில் 10 கிலோ குட்கா பொருள்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் குட்கா கடத்தி வந்த நபா் குறித்து விவரம் தெரியாததால் மேல் நடவடிக்கைக்காக ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து ரயில்வே போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.