கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பண மதிப்பிழப்பு தினம்: மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

உயர் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு ஓராண்டு முடிந்ததை முன்னிட்டு நவ-8 ஆம் நாளை கருப்பு தினமாக அறிவித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது

News image
Updated On :9 நவம்பர் 2017, 10:04 pm

DIN

உயர் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு ஓராண்டு முடிந்ததை முன்னிட்டு நவ-8 ஆம் நாளை கருப்பு தினமாக அறிவித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. 
திருவள்ளூர் பஜார் வீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எ.ஜி.சிதம்பரம் தலைமை வகித்தார். இதில் நிர்வாகி சி.பி.மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஆண்டு இதேநாளில் இரவு 8 மணிக்கு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். அதோடு வங்கி வரிசையில் நின்று பலர் உயிரிழந்தனர். இதை நினைவு கூறும் வகையில் அப்போது உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியிலும் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், ஜே.டி.அருள், ஜி.என்.பழனி , வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.