நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கோயில் திருவிழா நடத்துவது குறித்த பேச்சுவார்த்தை

கும்மிடிப்பூண்டி அருகே கோயில் திருவிழா நடத்துவது குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே வியாழக்கிழமை சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 9:54 pm IST

கும்மிடிப்பூண்டி அருகே கோயில் திருவிழா நடத்துவது குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே வியாழக்கிழமை சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 கும்மிடிப்பூண்டியை அடுத்த நத்தம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 4-ஆவது வாரம் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே யார் தலைமையில் திருவிழா நடத்துவது என்பது குறித்து பிரச்னை ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் திருவிழா நடத்துவது கேள்விக்குறியாகியது.
இந்நிலையில், இரு தரப்பினரும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மதன் குப்புராஜ், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி தெ.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஒரு தரப்பினர் கலந்து கொள்ளாததால் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் பேசுகையில், கருத்து மோதல்களை களைந்து திருவிழாவை சிறப்பாக நடத்த ஒத்துழைக்க வேண்டும், பேச்சுவார்த்தை முடியும் வரை யாரும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெடும் நிலையை உருவாக்கக் கூடாது, இரு தரப்பும் ஏற்கக்கூடிய வகையில் திங்கள்கிழமை இப்பிரச்னை சரிசெய்யப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.