அரசு மருத்துவமனையில் ரூ.1.60 கோடியில் அவசர சிகிச்சைப் பிரிவு

வாகன விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் நோக்கத்தில் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் ரூ.1.60 கோடியில்

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

வாகன விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் நோக்கத்தில் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் ரூ.1.60 கோடியில், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
 இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியது:   திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப் பிரிவு, நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, இருதய நோய் சிகிச்சைப் பிரிவு, சிறுநீரக சிகிச்சைப் பிரிவு, எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு இல்லை. இந்நிலையில், இம்மாவட்டத்தில் அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெறுகின்றன. இந்த விபத்துகளில் பலத்த காயம் அடைவோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்படுகின்றனர். அப்போது, இந்த மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு இல்லாததால் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். 
இதுபோன்று மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது எதிர்பாராதவிதமாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்கும் வகையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு தொடங்க ரூ.1.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, இந்த மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், இம்மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனைகளிலும் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு விரைவில் தொடங்க இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.