வாக்குப் பதிவு இயந்திரம் தயாரிக்கும் ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

சென்னை மாதவரம் அருகே, அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வாக்குப் பதிவு இயந்திரம் தயாரிக்கும் ஊழியர்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Published on
Updated on
1 min read

சென்னை மாதவரம் அருகே, அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வாக்குப் பதிவு இயந்திரம் தயாரிக்கும் ஊழியர்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் பணியை தேர்தல் ஆணையம் தனியார் நிறுவனத்தின் வசம் ஒப்படைத்திருந்தது.  
இதைத்தொடர்ந்து, புழலில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட  ஊழியர்கள் வாக்குப் பதிவு இயந்திரம் தயாரிக்கும் பணியில்  ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தனியார் நிறுவனத்தில் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்து வந்த வருவாய் அதிகாரிகளும், மாநகராட்சி அலுவலர்களும் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
 இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் 4 மணிநேரம் பணிகள் பாதிக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.