ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

ரஃபேல் விமானம் வாங்கியதில் ஊழல் செய்ததாக பொய்ப் பிரசாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினரைக் கண்டித்து ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட பாஜக

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


ரஃபேல் விமானம் வாங்கியதில் ஊழல் செய்ததாக பொய்ப் பிரசாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினரைக் கண்டித்து ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட பாஜகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்டத் தலைவர் லோகநாதன், கிழக்கு மாவட்டத் தலைவர் பாஸ்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் மாவட்ட பொதுச் செயலர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். 
மத்தியில் ரஃபேல் விமானம் வாங்கியதில் ஊழல் செய்ததாக பாஜக குறித்து பொய்ப் பிரசாரம் செய்து வரும் காங்கிரஸை கண்டித்து பாஜகவினர் கோஷம் எழுப்பினர். 
இதில், இளைஞர் அணித் தலைவர் ஆர்யா சீனிவாசன், மாவட்டச் செயலர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகரத் தலைவர் துரைப்பாண்டியன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.