நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மீஞ்சூர் ரயில் நிலையத்தில் ஏடிஜிபி ஆய்வு

மீஞ்சூர் ரயில் நிலையத்தில், ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். 

Updated On :30 ஜனவரி 2024, 6:45 pm IST

மீஞ்சூர் ரயில் நிலையத்தில், ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். 
சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் மார்க்கத்தில் திருவொற்றியூர், எண்ணூர், மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இவ்வழியாக நாள்தோறும் 2லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மின்சார ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்த மார்க்கத்தில் சில பகுதிகளில் மர்ம நபர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை விற்பது உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், ரயிலில் பயணம் செய்யும் திருநங்கைகள் சிலபேர் பயணிகளிடம் அத்துமீறி நடந்து கொள்கின்றனர். மேலும், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி புறநகர் ரயில்கள் மூலம் ஆந்திரத்துக்கு கடத்திச் செல்லப்படுகிறது. 
இந்நிலையில், ரயில்வே காவல்துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு, பயணிகள் ரயிலில் வந்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இறங்கி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மார்க்க ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் மீஞ்சூர் நகர வியாபாரிகள் சங்கத்தினர் ஆகியோர் ஏடிஜிபியை சந்தித்தனர். 
அப்போது, மீஞ்சூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் நிலையம் அமைக்க வேண்டும், ரயில் நிலைய எல்லைக்குள் நடைபெறும் சமூக விரோதச் செயல்களை தடுக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பரீசிலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் ஏடிஜிபி தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர், ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளிடம் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். நிகழ்வில், ஏடிஜிபியுடன் ரயில்வே பாதுகாப்பு காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.