நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ரூ.10 லட்சம் மதிப்புள்ள "குட்கா' போதைப் பொருள்கள் பறிமுதல் 

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் தனியார் கிடங்கு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10லட்சம் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருள்களை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். 

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் தனியார் கிடங்கு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10லட்சம் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருள்களை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். 
மீஞ்சூரில் தனியாருக்கு சொந்தமான கிடங்கு ஒன்றில் குட்கா புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு, அவை அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு ரகசியமாக விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மீஞ்சூர் போலீஸார் தனியாருக்கு சொந்தமான அந்த கிடங்கினை சோதனை செய்தனர். 
அப்போது அங்கு 70 மூட்டைகளில் குட்கா புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.10லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.  இதனை தொடர்ந்து, போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸார், அதனை பதுக்கி வைத்திருந்த கிடங்கின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.