இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பாஜகவை பாசிச கட்சி என விமர்சித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டித்து, திருவள்ளூரில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST


பாஜகவை பாசிச கட்சி என விமர்சித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டித்து, திருவள்ளூரில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் பஜார் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற கண்டனஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் ரகுராமன் முன்னிலை வகித்தார். இதில், தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசை செளந்தரராஜன் முன்னிலையில் பாஜகவை எதிர்த்து கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியாவைக் கைது செய்ய வேண்டும், அவரது பின்புலம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் எனவும், அந்த மாணவிக்கு ஆதரவு தெரிவிப்பது போல், பாஜகவை பாசிச கட்சி என விமர்சித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். 
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டப் பொதுச் செயலாளர்கள் அஷ்வின், ராஜ்குமார், மாவட்டச் செயலாளர்கள் பாலாஜி, கருணாகரன், மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆர்யா சீனிவாசன் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.