இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கருத்து கணிப்பைவிட மக்கள் கணிப்புதான் முக்கியம்: ஜி.கே.வாசன்

தேர்தல் குறித்த கருத்து கணிப்பைவிட மக்கள் கணிப்புதான் முக்கியம் என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

News image
தமாகா மூத்த நிர்வாகி வழக்கறிஞர் சி.ஆர்.தசரதனின் திருவுருவப் படத்தை திறந்து வைக்கும் ஜி.கே.வாசன்.
Updated On :1 மார்ச் 2021, 7:31 am

DIN

தேர்தல் குறித்த கருத்து கணிப்பைவிட மக்கள் கணிப்புதான் முக்கியம் என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

தாமக நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் நண்பரும் தமாகா மூத்த நிர்வாகி வழக்கறிஞர் சி.ஆர்.தசரதனின் மறைவையொட்டி கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரத்தில் அவரது திருவுருவப் படத்தை தமாக தலைவர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார். நிகழ்விற்கு த.மா.கா திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் தமாகா தலைவர் எஸ்.சேகர் முன்னிலை வகித்தார். நிகழ்வில் தமாக தெற்கு மாவட்டதலைவர் விக்டரி மோகன்,மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், சத்ய நாராயணா, அருண்குமார், பி.எம்.பாலா, மாநில பொது செயலாளர் பி.எஸ்.பழனி,தொகுதி பொறுப்பாளர் திருவேங்கடம், மாநில பொதுக்குழு உறுப்பினர் டி.கே.மாரிமுத்து முன்னிலை வகித்தனர்.

Story image

நிகழ்வில் அதிமுக மாவட்ட செயலாளர் பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பி.பலராமன், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், அதிமுக நிர்வாகிகள் பி.ரவிச்சந்திரன், கோபால்நாயுடு, கோவி.நாராயணமூர்த்தி, அபிராமன், மு.க.சேகர், டி.சி.மகேந்திரன், பாமக மாநில துணை பொது செயலாளர் துரை ஜெயவேலு, காங்கிரஸ் மாநில துணை பொது செயலாளர் எம்.சம்பத், திமுக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஷ்வரி, பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து வழக்கறிஞர் சி.ஆர்.தசரதன் திருவுருவப் படத்தை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் திறந்து வைத்து பேசும் போது தமாகா கட்சியை ஜி.கே.மூப்பனார் துவக்கிய காலத்திலேயே அவருக்கு ஆலோசனைகளை வழங்கியவர் வழக்கறிஞர் சி.ஆர்.தசரதன் என்று புகழாரம் சூட்டினார்.

மேலும் பேசியவர் அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடை தமாக சார்பில் சுமூகமான முறையில் பேசி தீர்த்துக் கொள்வோம். பெட்ரோல், டீசல் விலை வரும் நாள்களில் குறையக் கூடிய உறுதியான நிலையை மத்திய அரசு எடுக்கும் அதற்குன்டான பணிகளை செய்துக் கொண்டிருப்பதாக அத்துறையின் மத்திய அமைச்சர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளார். தேர்தல் குறித்த கருத்து கணிப்பை விட மக்கள் கணிப்புதான் முக்கியம். வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றியை பெறும் என்று ஜி.கே.வாசன் கூறினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை தமாகா மாவட்ட தலைவர் எஸ்.சேகர், தாஸ், காமராஜ் உள்ளிட்டோர் முன்னின்று செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.