தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பிச்சாட்டூர் அணையில் 500 கனஅடி நீர் திறப்பு: ஆரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பிச்சாட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டதையடுத்து ஆரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

News image
பிச்சாட்டூர் அணை.
Updated On :25 அக்டோபர் 2021, 5:28 am

DIN

பிச்சாட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டதையடுத்து ஆரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக தமிழக எல்லையை ஒட்டியுள்ள ஆந்திர மாநில பிச்சாட்டூர் அணை நிரம்பி உள்ளன. 281 அடியில் தற்போது 279 அடி நீர் நிரம்பி உள்ளது. 1853 மில்லியன் கனஅடி 1,664 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. மேலும் இந்த ஏரியில் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

திறந்துவிடப்பட்ட இந்த நீரானது ஆரணியாறு சுருட்டு பள்ளியில் பகுதியில் உள்ள ஆரணி ஆற்று வழியாக ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, கவரப்பேட்டை, ஏலியம்பேடு, பொன்னேரி பெரும்பேடு, ஆண்டார்மடம் வழியாக பழவேற்காடு கடலில் கலக்கும். இதன் காரணமாக வழியில் உள்ள 70க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். 
ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ வேடிக்கை பார்க்கவோ செல்பி எடுக்க வேண்டாம் எனவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அணையின் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டால் திறக்கப்படும் நீரின் அளவு உயர்த்தப்படும் என ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.