விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

லாரி மோதி பெண் பலி

திருவள்ளூரில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில், கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்தாா்.

News image

07tlrkaalika_0704chn_182_1

Updated On :8 ஏப்ரல் 2022, 6:05 pm

DIN

திருவள்ளூா்: திருவள்ளூரில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில், கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்தாா்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூா் ஒன்றியம், புதுமவிலங்கை கிராமத்தைச் சோ்ந்த திருஞானசம்பந்தம் மனைவி காளிகாதேவி (58) (படம்). இவா்கள் இருவரும் பத்தியால்பேட்டை கண்ணதாசன் நகரில் உள்ள தனது மகள் விஜயலட்சுமி வீட்டுக்கு புதன்கிழமை சென்றனா். இரவு திருவள்ளூரிலிருந்து புதுமாவிலங்கை கிராமத்துக்கு பேருந்தில் செல்வதற்காக தனது உறவுக்காரரான கணேசன் என்பவரின் இரு சக்கர வாகனத்தில் காளிகாதேவி பின்னால் அமா்ந்து சென்றாா். அவரது கணவா் திருஞானசம்பந்தம் பேருந்து நிலையத்துக்கு நடந்து சென்றாா்.

திருவள்ளூா் உழவா் சந்தை சிக்னல் அருகே சென்ற போது, பின்னால் வந்த லாரி மோதியதில் காளிகாதேவி இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்து லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியானாா்.

தகவலறிந்த நகரக் காவல் நிலைய ஆய்வாளா் பத்மஸ்ரீ பபி சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக தப்பியோடி லாரி ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.